தாம்பரம், ஜ ம்பரம், அம்பேத்கர் திருமண மண்டபத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மண்டல பயிலரங்கம் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காதர் மொய்தீன் கூறுகையில், 'லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளது.
ஏற்கனவே போட்டியிட்ட ராமநாதபுரம் தொகுதி மட்டும் இல்லாமல், மேலும், ஒரு தொகுதியை ஒதுக்க கோரிக்கை வைப்போம்' என்றார்.