/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம் திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்
திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்
திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்
திருவொற்றியூர் புது பஸ் நிலைய பணி துவக்கம்
ADDED : ஜூன் 17, 2025 12:44 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர் - மாணிக்கம் நகர் பிரதான சாலையில், பேருந்து நிலையம் மற்றும் பணிமனை செயல்பட்டு வந்தது. இங்கிருந்து, வள்ளலார் நகர், பிராட்வே, எழும்பூர், பூந்தமல்லி, கோயம்பேடு என, பல்வேறு வழித்தடங்களில், தினமும், 88 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.
சில ஆண்டுகளுக்கு முன், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக பேருந்து நிலையத்தின் பாதி இடம் கையகப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, காலி மைதானத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. அங்கு போதிய இடம், குடிநீர் , கழிப்பறை கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால், பயணியர் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள பேருந்து நிலையம் இடம், பணிமனை இடத்தையும் சேர்த்து, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - பணிமனை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து, 14 கோடி ரூபாய் செலவில், 1.75 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
முதற்கட்டமாக, பணிமனையிலிருந்த பேருந்துகள், ஆங்காங்கே இருக்கும் மற்ற பணிமனைகளை மாற்றி, பழைய கட்டடத்தை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிகள் முடிந்ததும், புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கும் என, தெரிகிறது.