/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூளைக்கட்டியால் பாதித்த பெண் எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு மூளைக்கட்டியால் பாதித்த பெண் எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு
மூளைக்கட்டியால் பாதித்த பெண் எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு
மூளைக்கட்டியால் பாதித்த பெண் எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு
மூளைக்கட்டியால் பாதித்த பெண் எம்.ஜி.எம்.,மில் மறுவாழ்வு
ADDED : செப் 12, 2025 02:34 AM
சென்னை, மூளை கட்டியால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படாமல், எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை டாக்டர்கள் மறு வாழ்வு அளித்து உள்ளனர்.
மருத்துவமனையின் மூளை அறுவை சிகிச்சை நிபுணர் அரவிந்த்குமார் கூறியதாவது:
சென்னையை சேர்ந்த பெண், கடுமையான தலைவலி, வலது கை மற்றும் கால் செயலிழப்பிற்கு வழிவகுக்கும் பலவீனத்துடன் மருத்துவமனைக்கு வந்தார்.
பரிசோதித்தப்போது, அவருக்கு மூளையில் கட்டி இருந்ததுடன், பக்கவாத பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாதிப்பு இருந்தது.
எனவே, மருத்துவ மனையில் உள்ள தொழில்நுட்பங்கள் உதவியுடன், ஒன்பது மணி நேர அறுவை சிகிச்சையில், பெண்ணின் மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.
தற்போது நோயாளி நலமுடன் உள்ளார். உரிய நேரத்தில் சவால்மிக்க சிகிச்சை வாயிலாக, நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.