/உள்ளூர் செய்திகள்/சென்னை/பைக்கில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்புபைக்கில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு
பைக்கில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு
பைக்கில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு
பைக்கில் சென்ற பெண் லாரி மோதி உயிரிழப்பு
ADDED : மார் 21, 2025 12:27 AM

செங்குன்றம்,
தி.நகர் காஞ்சி காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பத்மினி, 48. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில், அக்கவுன்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை அலுவலகத்திற்கு சென்ற இவர், அங்கு பணியாற்றும் திருப்பத்துாரை சேர்ந்த தில்லையரசன் என்பவருடன், சோழவரத்தில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு பைக்கில் சென்றார்.
புழல் ஜி.என்.டி., சாலையில் சென்ற போது, பைக் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த பத்மினி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, பத்மினியின் உடலை கைப்பற்றி, ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த தில்லையரசனை மீட்டு, செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
திருவொற்றியூரைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவரான அழகு, 49, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.