/உள்ளூர் செய்திகள்/சென்னை/மர்ம நபர் கொலை மிரட்டல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்மர்ம நபர் கொலை மிரட்டல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்
மர்ம நபர் கொலை மிரட்டல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்
மர்ம நபர் கொலை மிரட்டல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்
மர்ம நபர் கொலை மிரட்டல் பா.ஜ., பெண் நிர்வாகி புகார்
ADDED : பிப் 06, 2024 12:25 AM
திருமங்கலம், அண்ணா நகர் மேற்கு, வெல்கம் காலனியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயலட்சுமி. இவர், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பா.ஜ.,வில் மாநில மகளிர் அணி துணை தலைவியான ஜெயலட்சுமி, சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனருக்கு, 'ஆன்லைன்' வாயிலாக புகார் ஒன்றை அளித்தார்.
அதில், அடையாளம் தெரியாத மொபைல் போன் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், என்னை தரக் குறைவாகவும், ஆபாசமாகவும் பேசினார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பற்றியும் அநாகரீகமாக பேசி, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
புகார், திருமங்கலம் போலீசுக்கு மாற்றப்பட்டு, மொபைல் போன் எண்ணை வைத்து, மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.