/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 1 மீட்டர் சாலை வெட்டை சீரமைக்க ரூ.5,200 வசூலிப்பதா? மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி கேள்வி 1 மீட்டர் சாலை வெட்டை சீரமைக்க ரூ.5,200 வசூலிப்பதா? மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி கேள்வி
1 மீட்டர் சாலை வெட்டை சீரமைக்க ரூ.5,200 வசூலிப்பதா? மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி கேள்வி
1 மீட்டர் சாலை வெட்டை சீரமைக்க ரூ.5,200 வசூலிப்பதா? மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி கேள்வி
1 மீட்டர் சாலை வெட்டை சீரமைக்க ரூ.5,200 வசூலிப்பதா? மாநகராட்சி கூட்டத்தில் சரமாரி கேள்வி
ADDED : மே 29, 2025 12:40 AM

சென்னை
சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. பெரும்பாலான கவுன்சிலர்கள், குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்னை குறித்து பேசினர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
அண்ணா நகர் மண்டலக்குழு தலைவர் ஜெயின்: துாய்மை பணிக்கு, 567 பேர் பற்றாக்குறை உள்ளது. அண்ணா நகர் மண்டல கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் மட்டும் பங்கேற்கின்றனர். மின் வாரியம், உணவு வழங்கல் துறை, வருவாய் துறை தொடர்பான கூறப்படம் குறைகளை கேட்க, அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்பதில்லை.
மேயர் பிரியா: மாநகராட்சி, குடிநீர் வாரியம் அதிகாரிகள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும். இதர துறைகளை கட்டாயம் வர வேண்டும் என வலியுறுத்த முடியாது. கவுன்சிலர்கள் புகார்களை, வட்டார துணை கமிஷனர் வழியாக, அந்தந்த துறைகளுக்கு அனுப்பலாம்.
தி.மு.க., மோகன்குமார்: கிண்டி சிட்கோ வளாக பராமரிப்பில் உள்ள நிர்வாக சிக்கலை களைய, அந்த பகுதியை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஈக்காட்டுதாங்கல் மேம்பாலத்தின் கீழ் உள்ள தரைப்பாலத்தை வாகன போக்குவரத்துக்கு தயார் செய்ய வேண்டும்.
கமிஷனர் குமரகுருபரன்: 'சிட்கோ' வளாகத்தில் உள்ள கால்வாய், சாலைகள், மாநகராட்சி வசம் வர உள்ளது. வடிகால்வாயை சேர்ந்து ஒப்படைக்க, சிட்கோ நிர்வாகத்திடம் பேசி வருகிறோம்.
பா.ஜ., லியோசுந்தரம்: ஓ.எம்.ஆரில் உள்ள நீர்த்தேக்கங்களில் மழைநீரை சேமிக்கும் வகையில், இங்குள்ள முக்கிய குளங்களை சீரமைக்க வேண்டி, மூன்று ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறேன். வார்டு அலுவலகத்தில் மழைநீர் புகுவதால், இடத்தை மாற்ற வேண்டும்.
மேயர் பிரியா: குளங்கள் சீரமைக்க, விரைந்து நிதி ஒதுக்கப்படும்.
ம.தி.மு.க., ஜீவன்: குடிநீர் வாரியம், எழுதப்படாத சட்டம் போல் செயல்படுகிறது. குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு, 'ஆன்லைன்' வழியாக பணம் செலுத்த சொல்கின்றனர். எத்தனை பேருக்கு இந்த வசதி இருக்கும்.
காசோலை, வரைவோலையை வாங்க வேண்டும். ஒரு மீட்டர் சாலை துண்டிப்பை சீரமைக்க, 1,300 ரூபாய் செலவாகும். ஆனால், 5,200 ரூபாய் மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?
மேயர் பிரியா: மூன்று மாதங்களாக, ஜி.எஸ்.டி.,யுடன் பணம் வசூலிப்பது தெரிகிறது. துறை செயலர், குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனரிடம் பேசி தீர்வு காணப்படும்.
மா.கம்யூ., விமலா: மழைக்காலத்தில் நீர்வளத்துறை ஏன் மாநகராட்சியுடன் சேர்ந்து பணி செய்வதில்லை. வார்டு பொறியாளருக்கு, 'கட்டிங்' கொடுக்காததால், தரமணி, தர்மாம்பாள் பாலிடெக்னிக் சாலையில் உள்ள 25 சாலையோர கடைகளை அகற்றினார். கொடுங்கையூர் குப்பை கிடங்கில், எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும்.
துணை மேயர் மகேஷ்குமார்: வார்டு பொறியாளர், 'கட்டிங்' கேட்டார் என, யூகத்தின் அடிப்படையில் பேசக்கூடாது. ஆதாரம் இருக்கிறதா?
இந்த குற்றச்சாட்டை வாபஸ் வாங்குவதாக, கவுன்சிலர் விமலா கூறினார்.