/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது ஏன்? பஸ் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது ஏன்?
பஸ் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது ஏன்?
பஸ் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது ஏன்?
பஸ் பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது ஏன்?
ADDED : ஜூன் 02, 2025 03:01 AM

புழல்:மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட, புழல் அருகே விநாயகபுரம் -- லட்சுமிபுரம் இடையே உள்ள செகரட்டரியேட் காலனி, காந்திஜி தெரு அருகில், கடந்த 2023ம் ஆண்டு 15 லட்ச ரூபாய் செலவில், பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு முன் நிழற்குடை திடீரென அகற்றப்பட்டது. மீண்டும் வேறு இடத்தில் அமைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இன்னும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணியர் மழை மற்றும் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர். அதில், பயணியருக்காக அமைக்கப்பட்ட இணைய வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிவாசிகள் கூறுகையில், ‛நிழற்குடை அமைந்துள்ள இடம் அருகே, வணிக வளாகம் வர இருப்பதால் நிழற்குடை அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது; அதேபோல் இரவு வேளைகளில் 'குடி' மகன்களின் அட்டகாசமும் அதிகரித்தள்ளது' என்றனர்.
'மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக, 'குடி' மகன்களை அடக்காமல், 15 லட்ச ரூபாய் செலவழித்து அமைத்த நிழற்குடையை பாதுகாக்காமலும், அதை வேறு இடத்தில் வைக்காமலும் அகற்றியது, அதிகாரிகளின் திறமையற்ற தன்மையாகவே பார்க்கப்படுகிறது' என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.