/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மணலி விரைவு சாலை மைய தடுப்பு பணி கவுன்சிலர் தடுத்து நிறுத்தியது ஏன்? மணலி விரைவு சாலை மைய தடுப்பு பணி கவுன்சிலர் தடுத்து நிறுத்தியது ஏன்?
மணலி விரைவு சாலை மைய தடுப்பு பணி கவுன்சிலர் தடுத்து நிறுத்தியது ஏன்?
மணலி விரைவு சாலை மைய தடுப்பு பணி கவுன்சிலர் தடுத்து நிறுத்தியது ஏன்?
மணலி விரைவு சாலை மைய தடுப்பு பணி கவுன்சிலர் தடுத்து நிறுத்தியது ஏன்?
ADDED : ஜூன் 10, 2025 12:12 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் - பகிங்ஹாம் கால்வாயில் இருந்து, முல்லை நகர் சந்திப்பு வரை, 3 அடி உயரத்திற்கு சாலை மைய தடுப்பு அமைக்கும் பணியை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இச்சாலையில், டி.கே.எஸ்., நகர், ஜோதி நகர் மற்றும் முருகப்பா நகர் ஆகிய மூன்று இடங்களில், பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன், மூன்று சந்திப்பிலும் சாலையை கடக்கும் வகையில் இருந்த இடைவெளியை, போக்குவரத்து போலீசார் அடைத்து விட்டனர்.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள், பாதசாரிகள், 2 கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியிருந்தது. சிலர், எதிர்திசையில் பயணிப்பதால், விபத்துகளிலும் சிக்கினர்.
இதற்கிடையில், இந்த மூன்று சந்திப்புகளிலும் இடைவெளி ஏதுமின்றி மைய தடுப்பு அமைக்கும் பணி நடப்பதாக அறிந்த கவுன்சிலர் உள்ளிட்ட மார்க்.கம்யூ., கட்சியினர் மற்றும் பகுதிவாசிகள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர்.
தகவலறிந்து வந்த, எண்ணுார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் பேபி, இடைவெளி விடுவதில் சிக்கல் உள்ளதாக கூறியுள்ளார்.
இதனால், இரு தரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மூன்று மணி நேரம் பேச்சுக்கு பின், டி.கே.எஸ்., நகர், முருகப்பா நகர் ஆகிய பகுதிகளில், சுழல் கேட் வசதியுடன் சாலையை கடக்கவும், ஜோதி நகரில் ரவுண்டானா அமைக்கவும் போக்குவரத்து போலீசார் ஒப்புக் கொண்டனர்.
இது குறித்து, பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்தாரருக்கும் அறிவுறுத்தப்பட்டது. பின், மறியலில் ஈடுபட முயன்ற கவுன்சிலர் உள்ளிட்டோர் கலைந்தனர்.