சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னையில் கொலைகள் நடந்தது எங்கெங்கு?/சென்னையில் கொலைகள் நடந்தது எங்கெங்கு?
ADDED : மார் 18, 2025 12:28 AM
பிப்., 10ல், முகப்பேரை சேர்ந்த மைதிலி, 63, மகளின் காதலனால் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார் பிப்., 20ல், திருமுல்லைவாயிலில்உணவை தாமதமாக கொடுத்த மனைவி தனலட்சுமி, 60, கணவரால் கொலை செய்யப் பட்டார் பிப்., 28ல், அம்பத்துார் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த, கட்டடதொழிலாளி தினேஷ்பாபு, 38, கள்ளக்காதல் விவகாரத்தில், கொல்லப்பட்டார் மார்ச் 2ல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் சங்களா,42, பொறுப்பின்றி இருப்பதாக திட்டியதால், மகனால் அடித்து கொல்லப்பட்டார் மார்ச் 3ல், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் குமார், 24, வாக்குவாதத்தில், நண்பர் சதீஷ்குமாரால் கொல்லப்பட்டு, மூட்டை கட்டி கால்வாயில் வீசப்பட்டார் மார்ச் 5ல், நங்கநல்லுார் முரளிதரனை, 66, மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஆதித்ய நாராயணனால், கத்திரிக்கோலால் குத்திக் கொல்லப்பட்டார் மார்ச் 8ல், வடபழனி, கோடம்பாக்கம் சிவன் கோவில் தெரு சாலையோரவாசியான தாஜ் உசேன், 25, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், அவரது நண்பரால் கொல்லப்பட்டார் மார்ச் 13ல், பல்லாவரத்தைச் சேர்ந்த ரவுடி அருண்குமாரை, 25, ஆறு பேர் கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தது மார்ச் 14ல், நடைபாதையில் கடை போடுவதில் ஏற்பட்ட தகராறில், நீலாங்கரையைச் சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ராஜாவை, 41, ரவுடி மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேர் கொன்றனர் மார்ச் 15ல், திரு.வி.க., நகரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் சேகரன், 72, மகனால் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில், நேற்றும் கோட்டூர்புரத்தில் இரண்டு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.