/உள்ளூர் செய்திகள்/சென்னை/சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
சுகாதார நிலையம் திறப்பு விழா எப்போது?
ADDED : ஜன 29, 2024 01:51 AM

ராயப்பேட்டை:ராயப்பேட்டை, முத்தையா முதலி தெருவில், 120வது வார்டில், மக்கள் பயன்பாட்டிற்காக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
தற்போது, ஆரம்ப சுகாதார நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியும், பூட்டியே கிடக்கிறது.
இதனால், அப்பகுதியினர் சிறு காய்ச்சல் என்றாலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால், காலை சென்றால் மதியம் வரை காத்திருந்து தான், மருத்துவரை பார்க்கும் அவல நிலை உள்ளது.
சிலர், தனியார் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஏழை மக்களால், பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியவில்லை.
எனவே, புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாநகராட்சி மருத்துவ அதிகாரி கூறியதாவது:
ராயப்பேட்டை 120வது வார்டில், புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி விட்டோம்.
ஆனால், எங்களுக்கு திறப்பு விழாவிற்கான தேதி முறையாக வரவில்லை. 10 நாட்களில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.