Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நடைபாதை வளாக திட்டப்பணிகள் இழுபறி வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் குமுறல்

நடைபாதை வளாக திட்டப்பணிகள் இழுபறி வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் குமுறல்

நடைபாதை வளாக திட்டப்பணிகள் இழுபறி வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் குமுறல்

நடைபாதை வளாக திட்டப்பணிகள் இழுபறி வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் குமுறல்

ADDED : ஜூன் 11, 2025 12:15 AM


Google News
ராயபுரம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னையின் பிரதான வர்த்தக பகுதியாக விளங்கும் வண்ணாரப்பேட்டை எம்.சி., ரோட்டில் 16 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணி துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான பூமி பூஜை, கடந்த 2024ல் துவங்கி பணிகள் நடக்கின்றன. இதில், வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, வீராஸ் கலெக் ஷன் துவங்கி ஜி.ஏ.ரோடு முத்துமாரியம்மன் கோவில் வரை, நடைபாதை வளாகம் அமைக்கப்பட உள்ளது.

சாலையின் இருபுறமும் 10 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகத்தில் மழைநீர் வடிகால், மின்சாரம், தொலைபேசி கட்டமைப்பு, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட அனைத்தும் செல்லும் வகையில், முழுமையான சாலையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நடைபாதை வளாகத்தின் சுற்றுச்சுவரில் அழகிய ஓவியங்கள் வரையப்பட உள்ளன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ராபின்சன் பூங்காவில், பெரிய வாகன நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பணிகள் துவங்கி ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு, ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தமிமுன் அன்சாரி கூறிதாவது:

வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோடில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

விரைவில் பண்டிகை காலம் துவங்க உள்ளதால், நடைபாதை வளாக பணிகளை விரைந்து முடித்து, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us