/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.35 கோடியில் எம்.எஸ்.நகர் குடியிருப்புகள் முதல்வர் தேதிக்காக 2 ஆண்டாக காத்திருப்பு ரூ.35 கோடியில் எம்.எஸ்.நகர் குடியிருப்புகள் முதல்வர் தேதிக்காக 2 ஆண்டாக காத்திருப்பு
ரூ.35 கோடியில் எம்.எஸ்.நகர் குடியிருப்புகள் முதல்வர் தேதிக்காக 2 ஆண்டாக காத்திருப்பு
ரூ.35 கோடியில் எம்.எஸ்.நகர் குடியிருப்புகள் முதல்வர் தேதிக்காக 2 ஆண்டாக காத்திருப்பு
ரூ.35 கோடியில் எம்.எஸ்.நகர் குடியிருப்புகள் முதல்வர் தேதிக்காக 2 ஆண்டாக காத்திருப்பு
ADDED : ஜூன் 05, 2025 11:34 PM
வால்டாக்ஸ் சாலை, சென்னை, வால்டாக்ஸ் சாலை, எம்.எஸ்.நகர் என்ற மீனாம்பாள் சிவராஜ் நகரில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.
பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில் விரிசல் விழுந்தும், கூரை உடைந்தும் அபாயகரமான நிலையில் காட்சியளித்தது. குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 2019ல், பழமையான குடியிருப்புகளை இடித்து விட்டு, 35 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்ட வாரியம் முடிவு செய்தது. இதற்கான பணிகள், 202ல் துவங்கின.
லிப்ட் வசதி, பால்கனி, மரக்கதவுகள், டைல்ஸ், வெஸ்டன் கழிவறை, தீயணைப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, ஜெனரேட்டர் வசதியுடன், ஒரு குடியிருப்பு, 400 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் 2023ல் முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், குடியிருப்புகள் இன்னும் திறக்கப்படவில்லை. விரைவில் குடியிருப்பை திறந்து, ஒதுக்கித்தர வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் தேதி கொடுத்தவுடன் இந்த மாதத்தில், எம்.எஸ்.நகர் குடியிருப்புகள் திறக்கப்படும்' என்றனர்.