ADDED : பிப் 25, 2024 12:16 AM

தி.நகர், தி.நகர், திருமலைப் பிள்ளை தெருவிலுள்ள வித்யோதயா பள்ளியின், பெண் கல்வியின் 100வது ஆண்டு விழா சிறப்பு கொண்டாட்டம், நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் எம்.கே.நாராயணன், உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் நடராஜன் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பள்ளியின் நிரந்தர உறுப்பினருமான ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி தாளாளர் நிரஞ்சனி, நிர்வாக குழு உறுப்பினர் பிரபா அப்பாசாமி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களை கவுரவித்து, நினைவு பரிசு வழங்கினர்.
மேலும், வித்யோதயா பள்ளியின் நினைவு தொகுப்பு புத்தகம் மற்றும் அஞ்சல் தலை வெளியீட்டு நிகழ்ச்சியும் நடந்தது.