/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி ரயில்வே சாலை 10 ஆண்டுக்கு பின் புதுப்பிப்பு வேளச்சேரி ரயில்வே சாலை 10 ஆண்டுக்கு பின் புதுப்பிப்பு
வேளச்சேரி ரயில்வே சாலை 10 ஆண்டுக்கு பின் புதுப்பிப்பு
வேளச்சேரி ரயில்வே சாலை 10 ஆண்டுக்கு பின் புதுப்பிப்பு
வேளச்சேரி ரயில்வே சாலை 10 ஆண்டுக்கு பின் புதுப்பிப்பு
ADDED : ஜூன் 30, 2025 04:14 AM

வேளச்சேரி:வேளச்சேரி ரயில்வே சாலை, 10 ஆண்டுகளுக்கு பின், 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிப்பதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
வேளச்சேரி - தரமணி ரயில் நிலையம் இடையே உள்ள, ரயில்வே சாலை 2.5 கி.மீ., நீளம், 80 அடி அகலம் உடையது. ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.
வேளச்சேரி, பெருங்குடி, தரமணி ஆகிய மேம்பால ரயில் நிலையங்களை, இந்த சாலை இணைப்பதால், ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கி சாலையை உருவாக்கியது. பின் பராமரிக்க, எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சாலை மிகவும் மோசமானது.
அதேவேளையில், வேளச்சேரி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிமக்கள், தரமணி, திருவான்மியூர், ஓ.எம்.ஆர்., பகுதிகளுக்கு துரிதமாக செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இதனால், வாகன போக்குவரத்து அதிகரித்தது. சாலை மோசமாக இருந்ததால், அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்தன.
சாலையை ஒப்படைத்தால் முறையாக பராமரிப்பதாக மாநகராட்சி கூறியும், ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. எனினும், பழுதடைந்த சாலையை மட்டும் அவ்வப்போது ஒட்டு போட்டு மாநராட்சி சீரமைத்தது.
இந்நிலையில், மாநகராட்சி, ரயில்வே உயர் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இதில், ரயில்வே வசம் சாலை இருப்பதாகவும், பராமரிப்பு பணியை மாநகராட்சி செய்து கொள்ளலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சாலையை புதுப்பிக்க, 8 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியது. தார் சாலையாக புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின், சாலை புதுப்பிக்கப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.