/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேளச்சேரி வடிகால்வாய்கள் ரூ.70 லட்சத்தில் சீரமைப்பு வேளச்சேரி வடிகால்வாய்கள் ரூ.70 லட்சத்தில் சீரமைப்பு
வேளச்சேரி வடிகால்வாய்கள் ரூ.70 லட்சத்தில் சீரமைப்பு
வேளச்சேரி வடிகால்வாய்கள் ரூ.70 லட்சத்தில் சீரமைப்பு
வேளச்சேரி வடிகால்வாய்கள் ரூ.70 லட்சத்தில் சீரமைப்பு
ADDED : ஜூன் 12, 2025 12:08 AM
வேளச்சேரி, சென்னையில் அதிக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாக வேளச்சேரி உள்ளது. அருகில் சதுப்பு நிலம் உள்ளதால், நீரோட்டம் சீராக இருக்க வேண்டும்.
குடியிருப்புகளில் வெள்ளம் புகுவதை தடுப்பதில், வடிகால்வாய்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால், பல தெருக்களில் வடிகால்வாய்கள் சேதமடைந்துள்ளன. சில தெருக்களில் வடிகால்வாய் வசதி இல்லை. இதை, பருவமழைக்கு முன் சீரமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக, 176வது வார்டில், விஜயநகர், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 177வது வார்டு, காந்தி சாலை, பாலாஜி தெரு, ஜெகநாதபுரம், வெங்கடேஸ்வரா நகர், தண்டீஸ்வரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்க, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள், விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.