/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகர் கைதுமாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகர் கைது
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகர் கைது
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகர் கைது
மாமூல் கேட்டு மிரட்டிய வி.சி., பிரமுகர் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:37 AM
எம்.கே.பி. நகர், எம்.கே.பி., நகர், நார்த் அவென்யூ சாலை சந்திப்பில், நடைபாதை கடைகளில் நேற்று முன்தினம் இரவு, மணிகண்டன் என்பவர், மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார்.
இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய, வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், 10வது மத்திய குறுக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கோவில் மணி, 43, என்பவரை, நேற்று தனிப்படை போலீசார், அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
வி.சி., கட்சியின், 35வது வட்ட செயலராக உள்ள இவர் மீது, கொலை முயற்சி, அடிதடி உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்கு பின், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.