/உள்ளூர் செய்திகள்/சென்னை/வடபழனி ஆண்டவர் வீதி உலா ஆக்கிரமிப்பு வாகனங்களால் இடையூறுவடபழனி ஆண்டவர் வீதி உலா ஆக்கிரமிப்பு வாகனங்களால் இடையூறு
வடபழனி ஆண்டவர் வீதி உலா ஆக்கிரமிப்பு வாகனங்களால் இடையூறு
வடபழனி ஆண்டவர் வீதி உலா ஆக்கிரமிப்பு வாகனங்களால் இடையூறு
வடபழனி ஆண்டவர் வீதி உலா ஆக்கிரமிப்பு வாகனங்களால் இடையூறு
ADDED : பிப் 25, 2024 12:11 AM

வடபழனி, வடபழனியில் அமைந்துள்ள ஆண்டவர் கோவில், தென்பழனிக்கு நிகரானது. இக்கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.
இந்த கோவிலின் முகப்பு சாலை, கோவிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில், விசேஷ நாட்கள் மற்றும் திருவிழாக்களின் போது, சுவாமி புறப்பாட்டிற்கும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் இடையூறாக வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று, வடபழனி ஆண்டவர் கோவிலில், மாசி மகம் திருவிழா நடந்தது. இதையடுத்து நேற்று காலை, சுவாமி வீதி உலா நடந்தது.
அப்போது, கோவில் மாடவீதியைச் சுற்றி, இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்ததால், சுவாமி புறப்பாட்டிற்கு இடையூறாக இருந்தது.
ஒவ்வொரு மாடவீதியிலும் குறுக்கே, சுவாமி புறப்பாட்டிற்கு தடையாக இருந்த வாகனங்களை, கோவில் ஊழியர்கள் சாலையோரத்தில் ஒதுக்கி நிறுத்திவிட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், இதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே, வடபழனி கோவில் குளத்தைச் சுற்றி, பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.