Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தமிழகத்திற்காக 'வி - கார்ட்' ரூ.53.06 லட்சம் ஒதுக்கீடு

தமிழகத்திற்காக 'வி - கார்ட்' ரூ.53.06 லட்சம் ஒதுக்கீடு

தமிழகத்திற்காக 'வி - கார்ட்' ரூ.53.06 லட்சம் ஒதுக்கீடு

தமிழகத்திற்காக 'வி - கார்ட்' ரூ.53.06 லட்சம் ஒதுக்கீடு

ADDED : ஜூன் 17, 2025 12:52 AM


Google News
சென்னை, கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு, சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காக, 'வி - கார்ட்' நிறுவனம் 53.06 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளது.

இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:

'வோல்டேஜ் ஸ்டெபிலைஸர்' தயாரிப்பில் முன்னணியில் உள்ள வி - கார்ட் நிறுவனம், சமூக மேம்பாட்டிற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், 53.06 லட்சம் ரூபாய் செலவில், சி.எஸ்.ஆர்., திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

கல்வித் துறையில், பல அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு, சின்ன நவக்கரை அரசு பள்ளியில், 645 சதுர அடி டைனிங் ஷெட் கட்டப்பட்டு, பள்ளி வளாகங்களில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், பேவர் பிளாக்குகள் அமைத்து கொடுத்துள்ளது.

கோவை கிராமப்புறங்களில், இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் வாயிலாக, 5,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். அத்தியாவசிய உபகரணங்களை வழங்குவதன் வாயிலாக, ஆறு அரசு மருத்துவமனைகளுக்கு, ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில், தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மறு சீரமைப்பு, அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. கடந்த 2024 - 25 நிதியாண்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டில்லி என, பல மாநிலங்களில், 5.50 கோடி ரூபாய்க்கு மேல், சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us