/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வியாசர்பாடி, ராயபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு வியாசர்பாடி, ராயபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு
வியாசர்பாடி, ராயபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு
வியாசர்பாடி, ராயபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு
வியாசர்பாடி, ராயபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு
ADDED : ஜூலை 05, 2025 12:26 AM
ராயபுரம்,வியாசர்பாடி மற்றும் ராயபுரத்தில் நுாலகங்களை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
தி.மு.க., இளைஞரணிசார்பில், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி, ராயபுரத்தில் நுாலகங்கள் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது:
தேர்தல் நிதியாக 1 கோடி ரூபாய் காசோலையை, எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர் வழங்கினார். தேர்தலுக்கு முன், மீண்டும்அவர் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டும்.ஒவ்வொரு முறை வரும்போதும், தேர்தல் நிதி வழங்க வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடுஇயக்கம் மூலம் தி.மு.க.,வின் சாதனைகளையும், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி தமிழகத்திற்கு செய்துள்ள துரோகங்களையும், மக்களிடம் சொல்லி உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.
தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க நாம் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தள்ளு முள்ளு
ஆர்.கே.நகரில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு மையத்தை துவக்கி வைத்த உதயநிதி, பரிசு பொருட்கள் வழங்கினார்.
பரிசு பொருட்கள் பெற மகளிர் சுயஉதவிக் குழுவினர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முடியமல் போலீசார் திணறினர்.