கூலிப் போதை பொருள் விற்ற இருவர் கைது
கூலிப் போதை பொருள் விற்ற இருவர் கைது
கூலிப் போதை பொருள் விற்ற இருவர் கைது
ADDED : ஜன 13, 2024 01:01 AM
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, எம்.எம்.கார்டனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூலிப் போதை பொருள் விற்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் உள்ள வீட்டில் ஆய்வு மேற்கொண்டு கூலிப் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மோகன், 56 கைது செய்தனர்.
தலைமறைவான கோவிந்தம்மாள், 55, தேடி வருகின்றனர்.அதேபோல் எம்.கே.பி.நகர், 4வது குறுக்கு தெருவில் பெட்டிக்கடையில் எம்.கே.பி.நகர் போலீசார் சோதனையிட்ட போது அங்கு கூலிப் போதை பொருள் விற்றது தெரிய வந்தது. இதையடுத்து கூலிப் விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூர், சேலவாயிலை சேர்ந்த ராஜேந்திரன், 67 என்பவரை எம்.கே.பி.நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.