ADDED : மே 21, 2025 12:53 AM
ஓட்டேரி:ஓட்டேரி, டோபிகானா பகுதியில் நேற்று காலை 7:00 மணியளவில், குடிசை பகுதி அருகில் மதுபானங்கள் கள்ளச்சந்தையில் விற்பதாக, ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட ஓட்டேரியைச் சேர்ந்த கேப்டன், 36, மற்றும் ஆஷா, 38, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 40க்கும் மேற்பட்ட குவார்ட்டர் மதுபாட்டில்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஆஷா மீது, ஏற்கனவே 20 வழக்குகள் உள்ளன.