/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 7 ஆண்டாக சாலை அமைக்காமல் இரு ஊராட்சிகள் 'தகிடுதத்தம்' 7 ஆண்டாக சாலை அமைக்காமல் இரு ஊராட்சிகள் 'தகிடுதத்தம்'
7 ஆண்டாக சாலை அமைக்காமல் இரு ஊராட்சிகள் 'தகிடுதத்தம்'
7 ஆண்டாக சாலை அமைக்காமல் இரு ஊராட்சிகள் 'தகிடுதத்தம்'
7 ஆண்டாக சாலை அமைக்காமல் இரு ஊராட்சிகள் 'தகிடுதத்தம்'
ADDED : செப் 22, 2025 03:21 AM

கோவிலம்பாக்கம்: கோவிலம்பாக்கம் - மேடவாக்கம் இணைப்பு சாலையை, இருமுறை அமைத்துள்ளதாக கணக்கு காட்டி பணம் கையாடல் நடந்திருப்பதாக, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கோவிலம்பாக்கம், மேடவாக்கம் ஊராட்சிகள். இந்த இரு ஊராட்சிகளையும் இணைக்கும், 942 மீட்டர் நீளமுடைய சாலை, பல ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டு மனு அளித்திருந்தனர். அதற்கான பதிலில், கடந்த 2019ம் ஆண்டு 31.40 லட்சம் ரூபாயிலும், 2021ம் ஆண்டு 31.43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இச்சாலை அமைக்கப்படவில்லை எனவும், அப்படி அமைத்திருந்தால் அமைத்த சாலை எங்கே எனவும், பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனவே, மாவட்ட கலெக்டர் இதில் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.