/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார் மோதி இருவர் காயம் ஓட்டுநர் கைது கார் மோதி இருவர் காயம் ஓட்டுநர் கைது
கார் மோதி இருவர் காயம் ஓட்டுநர் கைது
கார் மோதி இருவர் காயம் ஓட்டுநர் கைது
கார் மோதி இருவர் காயம் ஓட்டுநர் கைது
ADDED : மே 25, 2025 12:24 AM
சென்னை :இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மைய வளாகத்தில், திறந்தவெளி மதுக்கூடம் உள்ளது. இங்கு நேற்று, மூன்று பேர் மது அருந்தி உள்ளனர். பின், அவர்கள் பொழுதுபோக்கு மைய வளாகத்தின் உள் காரை அதிவேகமாக ஓட்டியுள்ளனர்.
இதில், பொழுதுபோக்கு மையத்தில் தோட்ட வேலை செய்யும் ஒண்டிவீரன், 65, பாண்டியன், 35, ஆகியோர் மீது கார் மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
மேலும், காரை தாறுமாறாக ஓட்டியதில் தடுப்பு சுவரில் மோதி நின்றது. அங்குள்ள, ஊழியர்கள் காரை மடக்கி பிடித்து, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பனையூரை சேர்ந்த ஓட்டுநர் மூர்த்தி, 35, என தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, தப்பி சென்ற உடன் இருந்தவர்களை தேடி வருகின்றனர்.