/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம் பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்
பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்
பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்
பைக்கை முந்த முயன்ற காரால் இருவர் காயம்
ADDED : ஜூன் 18, 2025 11:51 PM
அம்பத்துார், புழல் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி குமார், 57; பெயின்டர். இவர், பணி நிமித்தமாக பாடியில் இருந்து அம்பத்துார் நோக்கி நேற்று மதியம் சி.டி.எச்., சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மண்ணுார்பேட்டை அருகே காந்தி குமாரின் பைக்கை முந்த முயன்ற 'சுசூகி ஸ்விப்ட்' கார், திடீரென அவரது இருசக்கர வாகனம் மீது உரசியது. இதில், நிலைதடுமாறிய காந்தி குமாரின் பைக், சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதியது.
இதில், காந்தி குமார் மற்றும் இளம்பெண் காயமடைந்தனர். சக வாகன ஓட்டிகள், இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.