/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது
டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது
டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது
டாஸ்மாக் பாரில் தகராறு ஆட்டோ ஓட்டுநர் இருவர் கைது
ADDED : ஜூன் 25, 2025 12:10 AM
திரு.வி.க.நகர், டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் மூன்றுபேரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பெரவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் எபினேசர், 36. இவர் நண்பர்கள் ராஜா, பிரபு ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை பூங்கா அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்திற்கு சென்று மது அருந்தியுள்ளார்.
அருகே கொளத்துாரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கோவிந்தராஜ், 24 மற்றும் அவரது தம்பி பாலாஜி, 22 ஆகியோரும் மது அருந்தினர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது.
இருதரப்பினரும் மதுக்கூடத்தில் இருந்து வெளியேறினர். எபினேசர், ராஜா, பிரபு பூங்கா அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். கோவிந்தராஜும், பாலாஜியும் சென்று, எபினேசர் மூவரையும் மண்வெட்டியால் தாக்கி விட்டு சென்றனர்.
காயமடைந்த மூவரும் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். திரு.வி.க.நகர் போலீசார் வழக்குபதிந்து, கொளத்துாரைச் சேர்ந்த கோவிந்தராஜ், 24 பாலாஜி, 22 ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.