ADDED : மார் 21, 2025 12:20 AM
சென்னை, ராயப்பேட்டை, அங்கமுத்து தெருவைச் சேர்ந்தவர் அஸ்தாப் உசேன், 67. கடந்த, 18 ம் தேதி மாலை, வீட்டை பூட்டாமல், எதிர் வீட்டில் வசிப்பவர்களிடம் பேசச் சென்றார்.
பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மேஜையில் வைத்திருந்த அவரது மொபைல்போன் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ராயப்பேட்டை பெசன்ட் சாலையைச் சேர்ந்த கார்த்திக்கேயன், 19 என்பவர், 15 வயது சிறுவனுடன் சேர்ந்து, மொபைல் போனனை திருடியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதில் கைதான சிறுவன், கடந்த 17 ம் தேதி, ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் உள்ள முருகன் என்பவரது வீட்டில், இரு மொபைல் போன்கள், 5,000 ரூபாயை திருடியதும் தெரிய வந்துள்ளது.