/உள்ளூர் செய்திகள்/சென்னை/மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடிய இருவர் கைதுமூதாட்டிகளை குறிவைத்து நகை திருடிய இருவர் கைது
மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடிய இருவர் கைது
மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடிய இருவர் கைது
மூதாட்டிகளை குறிவைத்து நகை திருடிய இருவர் கைது
ADDED : ஜூன் 17, 2025 01:00 AM
திருவேற்காடு, ஆவடி பக்தவச்சலபுரம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தினேஷ்ராஜ், 21; பி.டெக்., கல்லுாரி மாணவர்.
இவர், கடந்த 5ம் தேதி இரவு, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், அவரது நண்பர் நிகில், 21, என்பவரை, அயப்பாக்கத்தில் இறக்கி விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
ஆவடி - கோலடி சாலையில் சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தினேஷ்ராஜை வழிமறித்து, அவர் அணிந்திருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பினர்.
இது குறித்த புகாரின்படி விசாரித்த திருவேற்காடு போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட வில்லிவாக்கம், தாதாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த முகமதுஜாபர், 30, மற்றும் கிஷோர் குமார், 30, ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
அதில், இருவரும் திருவேற்காடு, போரூர், பூந்தமல்லி, அண்ணா நகர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
அண்ணாநகர், போரூர் சுற்றுவட்டார பகுதிகளில், மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அவர்களிடமிருந்து, 7 சவரன் நகை, ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. வேறு எந்தந்த இடங்களில், இவர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.