/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மொபைல் போன் கடையில் திருடிய இருவர் கைது மொபைல் போன் கடையில் திருடிய இருவர் கைது
மொபைல் போன் கடையில் திருடிய இருவர் கைது
மொபைல் போன் கடையில் திருடிய இருவர் கைது
மொபைல் போன் கடையில் திருடிய இருவர் கைது
ADDED : ஜூன் 17, 2025 12:29 AM

கொடுங்கையூர்,கொருக்குப்பேட்டை, ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 30. இவர், கொடுங்கையூர், கட்டபொம்மன் பிரதான தெருவில், மொபைல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதி காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 15 மொபைல்போன்கள், 2,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, பழைய குற்றவாளிகளான தண்டையார்பேட்டை, சுனாமி கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன், 20, மீஞ்சூர், அத்திப்பட்டை சேர்ந்த கவுரி சங்கர், 28, ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர்.