ஹெராயின் கடத்தி விற்ற இருவர் கைது
ஹெராயின் கடத்தி விற்ற இருவர் கைது
ஹெராயின் கடத்தி விற்ற இருவர் கைது
ADDED : செப் 25, 2025 02:51 AM
தரமணி, திரிபுரா மாநிலத்தில் இருந்து, சென்னைக்கு ஹெராயின் கடத்தி விற்பனை செய்த, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அசிப்மிர்டா, 23, ஷாமியாக், 21. இருவரும், தரமணியில் தங்கி, செக்யூரிட்டியாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள், அவ்வப்போது திரிபுரா சென்று, கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்வது, போலீசாருக்கு தெரிந்தது.
தரமணி போலீசார், நேற்று இவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்தபோது, அங்கு 10 கிராம் ஹெராயின் இருந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஹெராயினை பறிமுதல் செய் தனர்.