/உள்ளூர் செய்திகள்/சென்னை/கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைதுகடையில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
கடையில் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
ADDED : பிப் 24, 2024 11:55 PM
ராயப்பேட்டை, ராயப்பேட்டை, சாந்தா சாகித் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல், 36. இவர், அதே பகுதியில் டூ - வீலர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 16ம் தேதி இரவு, வியாபாரம் முடிந்து வடிவேல் கடையை பூட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் கடைக்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கல்லாப் பெட்டியில் இருந்த 2.50 லட்ச ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரித்து, கண்ணகி நகரைச் சேர்ந்த பிரதீப் ராஜ், 23, குள்ள அஜய், 21, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.