சிறுமியருக்கு சீண்டல் இருவர் கைது
சிறுமியருக்கு சீண்டல் இருவர் கைது
சிறுமியருக்கு சீண்டல் இருவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 12:35 AM
திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி, நேற்று முன்தினம் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மீனவரான மதி, 45, என்பவர், சிறுமியை அழைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மற்றொரு சம்பவத்தில், புதுவண்ணாரப்பேட்டை, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒன்பது வயது சிறுமி, படிக்கட்டு வழியாக, நேற்று இறங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த தச்சரான கருணாகரன், 80, என்ற முதியவர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியர் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, சிறுமியின் பெற்றோர்கள், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, மதி, கருணாகரன், ஆகிய இருவரையும், நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.