/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தரமணியில் 'ஹெராயின்' திரிபுரா நபர் சிக்கினார் தரமணியில் 'ஹெராயின்' திரிபுரா நபர் சிக்கினார்
தரமணியில் 'ஹெராயின்' திரிபுரா நபர் சிக்கினார்
தரமணியில் 'ஹெராயின்' திரிபுரா நபர் சிக்கினார்
தரமணியில் 'ஹெராயின்' திரிபுரா நபர் சிக்கினார்
ADDED : மே 12, 2025 12:33 AM
சென்னை:சென்னை அடையாறு துணை கமிஷனர் தலைமையில் செயல்பட்டு வரும், ஏ.என்.யு.ஐ., எனும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று காலை தரமணி சி.எஸ்.ஐ.ஆர்., சாலை மற்றும் வி.வி.கோவில் தெரு சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும்படியாக நின்ற சிறுவன் உட்பட இரண்டு பேரின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 14 கிராம் ெஹராயின் போதை பொருள் சிக்கியது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மென்பொருள் நிறுவன ஊழியர்களை குறிவைத்து 'ஹெராயின்' போதை பொருட்கள் கடத்தி விற்றது தெரிய வந்தது.
விசாரணையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுஹைல் உசேன், 21, என்பதும், தரமணி காவல் நிலையத்தில், இவர் மீது குற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது.