Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்

தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்

தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்

தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்

ADDED : ஜன 14, 2024 12:28 AM


Google News
சென்னை,மெரினாவில், காணும் பொங்கல் அன்று தேவைப்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என, சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

* காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது.

* காமராஜர் சாலையில் வாகனங்கள் அதிகரித்த உடன், போர் நினைவுச் சின்னத்திலிருந்து கலங்கரை விளக்கம் செல்லும் வானகங்கள் வழக்கம் போல் அனுப்பபடும். கலங்கரை விளக்கத்திலிருந்து - போர்நினைவு சின்னம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரதி சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, பெல்ஸ் சாலை - வாலாஜா சாலை வழியாக செல்லலாம்.

* வாலாஜா சாலையில் இருந்து, விக்டோரியா விடுதி சாலை செல்ல அனுமதி கிடையாது. பாரதி சாலையிலிருந்து, விக்டோரியா விடுதி சாலை செல்லலாம்.

வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள் :

விக்டோரியா வார்டன் விடுதி

கலைவாணர் அரங்கம் பார்க்கிங்

மாநிலக்கல்லுாரி

சென்னை பல்கலைக்கழகம்

சேப்பாக்கம் ரயில் நிலையம்

லேடி வெலிங்டன் பள்ளி

சீனிவாசபுரம் லுாப் சாலை

உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us