/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செங்கல்பட்டு தடத்தில் வரும் 1ல் ரயில்கள் ரத்து செங்கல்பட்டு தடத்தில் வரும் 1ல் ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு தடத்தில் வரும் 1ல் ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு தடத்தில் வரும் 1ல் ரயில்கள் ரத்து
செங்கல்பட்டு தடத்தில் வரும் 1ல் ரயில்கள் ரத்து
ADDED : மே 30, 2025 12:30 AM
சென்னை, காட்டாங்கொளத்துார் பணிமனையில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் வரும் 1ம் தேதி நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஒரு பகுதி ரத்து
★ கடற்கரை - செங்கல்பட்டு காலை 11:00 மணி ரயில், 11:45, பகல் 12:30, மதியம் 1:45 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்
★ கடற்கரை - செங்கல்பட்டு பகல் 12:45 மணி ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்
★ செங்கல்பட்டு - கடற்கரை பகல் 12:00, 1:00, 1:50, மாலை 3:05 மணி ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்
★ செங்கல்பட்டு - கடற்கரை மதியம் 2:25 மணி ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
இத்தகவலை, சென்னை ரயில் கோட்டம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.