/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மதுக்கூடத்திற்கு வரும் வாகனங்களால் சாலிகிராமத்தில் போக்குவரத்து நெரிசல் மதுக்கூடத்திற்கு வரும் வாகனங்களால் சாலிகிராமத்தில் போக்குவரத்து நெரிசல்
மதுக்கூடத்திற்கு வரும் வாகனங்களால் சாலிகிராமத்தில் போக்குவரத்து நெரிசல்
மதுக்கூடத்திற்கு வரும் வாகனங்களால் சாலிகிராமத்தில் போக்குவரத்து நெரிசல்
மதுக்கூடத்திற்கு வரும் வாகனங்களால் சாலிகிராமத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூன் 30, 2025 03:25 AM
சாலிகிராமம்,:மதுக்கூடத்திற்கு வரும் 'குடி'மகன்களின் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், சாலிகிராமம் அருணாசலம் சாலையில் தினமும் நெரிசல் ஏற்படுவதாக, பகுதிமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு சாலி கிராமம் அருணாசலம் சாலையில் தனியார் பள்ளி மைதானம் அருகே டாஸ்மாக் மதுக்கூடம் உள்ளது.
இதையொட்டி, 700க்கும் மேற்பட்ட வீடுகள் உடைய ஹாரிசன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.
மதுக்கூடத்திற்கு வரும் 'குடி'மகன்கள், சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், அவ்வழியே செல்வோருக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன நெரிசல் நிலவுகிறது. இதனால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஹாரிசன் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2019, கொரோனா தொற்று காலத்தில், அருணாசலம் சாலையில் உள்ள இரு மாடி கட்டடத்தில் டாஸ்மாக் மதுக்கூடம் துவங்கப்பட்டது.
அந்த கட்டடத்தில் இருந்த டீக்கடை உள்ளிட்ட கடைகள் அகற்றப்பட்டு, முழு கட்டடமும் மதுக்கூடமாக மாற்றப்பட்டு உள்ளது.
இங்கு வரும் 'குடி'மகன்கள் நிறுத்தும் வாகனங்களால், சாலையில் நெரிசல் ஏற்படுகிறது.
தவிர, அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சிலர் மது அருந்துவதும், குப்பையை கொட்டி எரிப்பதும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தவிர, கட்டடத்தை ஒட்டி நடைபாதையிலே சிறுநீர் கழிப்பதால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
இதனால், அருகே வசிக்கும் எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மதுக்கூடத்தை அகற்ற கோரி, கலெக்டர், எம்.எல்.ஏ., என பலரிடம் மனு அளித்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.