/உள்ளூர் செய்திகள்/சென்னை/செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனைசெம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை
செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை
செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை
செம்மொழி பூங்காவில் பாரம்பரிய காய்கறி விற்பனை
ADDED : ஜன 13, 2024 12:00 AM
சென்னை,'நம்ம சென்னை; நம்ம சந்தை' என்ற பெயரில் பாரம்பரிய காய்கறிகள் விற்பனையை, செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத்துறை துவங்கியுள்ளது.
பாவூர் சத்திரம் வெண்டைக்காய், கண்ணாடி கத்தரி, இலவசம்பாடி முள்கத்திரி, காந்தாரி மிளகாய், இளஞ்சிவப்பு சர்க்கரை வள்ளி கிழங்கு, கறிபலா, புளியங்குடி எலுமிச்சை, மூக்குத்தி அவரை, சிறகு அவரை, பூனைக்காலி, வெள்ளைப்பாகல்.
மேலும், மஞ்சள் பாகல், எறையூர் சேப்பங்கிழங்கு, உளுந்துார்பேட்டை கருணைக்கிழங்கு, திருநெல்வேலி சிறுகிழங்கு, சாத்துார் வெள்ளரி, விருதுநகர் அதலைக்காய் உள்ளிட்ட 37 வகையான பாரம்பரிய காய்கறிகள், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படுகின்றன; இவை மருத்துவ குணம் கொண்டவை.
இது குறித்த விபரம் தெரியாததால், இவற்றின் விற்பனை குறைந்து வருகிறது.
எனவே, பாரம்பரிய காய்கறிகள் குறித்து இளைய தலைமுறையினர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அவற்றின் விற்பனையை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் தோட்டக்கலைத்துறை துவங்கிஉள்ளது.
இதை, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இதில், வேளாண்துறை செயலர் அபூர்வா, தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், பாரம்பரிய காய்கறிகள் விற்பனை நடக்கவுள்ளது.