ADDED : ஜூன் 30, 2025 03:01 AM
ஆன்மிகம்
சென்னை ஓம் கந்தாஸ்ரமம்
வாராகி நவராத்திரி, சபரி துர்க்கை மூலமந்திர சண்டி ஹோமம் - காலை 9:00 மணி, அபிஷேகம் - காலை 10:00 மணி. மாதுளை முத்து அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில், திருவிளக்கு பூஜை, மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
சுந்தரேசுவரர் கோவில்
பிரம்மோத்சவ விழா, பரிவேட்டை உத்சவம், காலை 10:00 மணி. புஷ்பக விமானம், இரவு 8:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
வாராகி அறச்சபை
பஞ்சமி வாராகி அபிஷேகம், காலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை.
திருவேட்டீஸ்வரர் கோவில்
அமர்நீதி நாயனார் குரு பூஜை, மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அமர்நீதி நாயனார் குருபூஜை, இரவு 7:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
பொது
முத்தையா பாகவதர் இசை விழா
ஹரிகேசாஞ்சலி அறக்கட்டளை மற்றும் நாரத கான சபா அறக்கட்டளை இணைந்து நடத்தும், காயக சிகாமணி, சங்கீத கலாநிதி, ஹரிகேசநல்லுார் டாக்டர் எல்.முத்தையா பாகவதரின் 80வது நினைவு நாள், இசை விழா நிகழ்த்துபவர் முனைவர் நிரஞ்சனா ஸ்ரீனிவாசன் குழுவினர், மாலை 6:30 மணி, அனுமதி இலவசம். இடம்: நாரத கான சபா, ஆழ்வார்பேட்டை.
தெருமுனை கூட்டம்
திருவொற்றியூர் தி.மு.க., கிழக்கு பகுதி செயலர் தனியரசு தலைமையில், கருணாநிதி, 102வது பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனை கூட்டம், மாலை 6:00 மணி. இடம்: ஈசாணி மூர்த்தி கோவில் தெரு, திருவொற்றியூர்.