/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டுநரிடம் செயின் பறித்த திருநங்கையர் மூவர் கைது ஓட்டுநரிடம் செயின் பறித்த திருநங்கையர் மூவர் கைது
ஓட்டுநரிடம் செயின் பறித்த திருநங்கையர் மூவர் கைது
ஓட்டுநரிடம் செயின் பறித்த திருநங்கையர் மூவர் கைது
ஓட்டுநரிடம் செயின் பறித்த திருநங்கையர் மூவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:15 AM
விருகம்பாக்கம், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரத்ராஜ்குமார், 25; கார் ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை காரில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனிக்கு சென்றார்.
அங்கு நின்றிருந்த மூன்று திருநங்கையர் 'லிப்ட்' கேட்டு காரில் ஏறினர். பின், விருகம்பாக்கம் சொர்ணாம்பிகை தெருவில் இறங்கியபோது, மூன்று திருநங்கையரும் சேர்ந்து பரத்ராஜ்குமாரை தாக்கி, அவரிடம் இருந்த 40 கிராம் எடையிலான இரு வெள்ளி செயின்களை பறித்து தப்பினர்.
இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, வெள்ளி செயினை பறித்த, அசோக் நகரைச் சேர்ந்த அகல்யா, 23, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சனா, 28, வடபழனியைச் சேர்ந்த பிரியா, 33, ஆகிய மூவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 40 கிராம் எடையிலான இரு வெள்ளி செயின் பறிமுதல் செய்யப்பட்டது.