ADDED : செப் 26, 2025 12:39 AM
பேசின்பாலம் :
பேசின்பாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பவுடர் மில்ஸ் சாலை - காந்தி நகர் சந்திப்பில், பேசின்பாலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புளியந்தோப்பை சேர்ந்த ஆகாஷ், 27, விமல், 34, மற்றும் அயனாவரத்தை சேர்ந்த காசி, 55, ஆகிய மூவரை பிடித்த போலீசார், அவர்களிடமிருந்த கத்தி மற்றும் குட்கா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில், ஆகாஷ் மற்றும் விமல் ஆகியோர், கத்தியுடன் மது போதையில் பொதுமக்களை அச்சுறுத்தி, பணம் பறித்தது தெரிய வந்தது.