ADDED : செப் 24, 2025 03:48 AM
பெருங்களத்துார், தொழிலாளியை தாக்கிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புது பெருங்களத்துார், பாரதி நகரை சேர்ந்தவர் சந்திரகுமார், 42. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, ஆர்.எம்.கே நகர், ரயில்வே தண்டவாளம் வழியாக சென்றார்.
அப்போது, அங்கு வந்த மூன்று பேர், அவரை தாக்கினர். தலை, முகத்தில் காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள், 108 ஆம்புலன்ஸில் அவரை தாம்பரம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்திரகுமாருக்கு 18 தையல் போடப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக, பீர்க்கன்காரணை போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண்ணிடம், சந்திரகுமார் பேசி வந்ததும், ரயில்வே தண்டவாள பகுதிக்கு வருமாறு, அப்பெண்ணை அழைத்ததும் தெரிந்தது. அப்பெண் அங்கு சென்ற போது, பின் தொடர்ந்து சென்ற பெண்ணின் மகன் உள்ளிட்ட மூன்று பேர், சந்திரகுமாரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.