Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருவாலங்காடு வாலிபர் கொலை போதை நண்பருக்கு 'மாவுக்கட்டு'

திருவாலங்காடு வாலிபர் கொலை போதை நண்பருக்கு 'மாவுக்கட்டு'

திருவாலங்காடு வாலிபர் கொலை போதை நண்பருக்கு 'மாவுக்கட்டு'

திருவாலங்காடு வாலிபர் கொலை போதை நண்பருக்கு 'மாவுக்கட்டு'

ADDED : மார் 23, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம், பூண்டி போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ், 19. திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா கிராமத்தில், உடலில் 20 இடங்களில் வெட்டுக் காயங்களுடன், லோகேஷ் சடலமாக மீட்கப்பட்டார்.

திருவாலங்காடு போலீசார், சந்தேகத்தின்பேரில், நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்த லோகேஷின் நண்பரான ஜெகன், 20, உட்பட ஐந்து பேரை, நேற்று முன்தினம் இரவு பிடித்தனர்.

இதில், லோகேஷை தான் தான் கொலை செய்ததாக ஜெகன் ஒப்புகொண்டதை அடுத்து, அவரை, போலீசார் கைது செய்தனர். மற்ற நான்கு பேரை, போலீசார் விடுவித்தனர்.

இக்கொலை குறித்து, போலீசார் கூறியதாவது:

லோகேஷ், ஜெகன் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. எனினும், நண்பர்களாக இருந்துள்ளனர்.

சம்பவ நாளன்று, லோகேஷை, பூண்டியில் இருந்து தன் இருசக்கர வாகனத்தில் ஜெகன் அழைத்து சென்றார். நார்த்தவாடா பாலம் அருகே, இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது, ஜெகன் இடுப்பில் இருந்து கத்தி விழுந்துள்ளது. இதுகுறித்து லோகேஷ் கேட்கவே, இருவருக்கும் கைகலப்பு ஆனது.

இதில் ஆத்திரமடைந்த ஜெகன், முதலில் லோகேஷின் காலிலும், பின், கை, தோள்பட்டையில் வெட்டியுள்ளார். பின், மார்பு, கழுத்து என 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீதிமன்றனத்தில் ஆஜர்படுத்திய போலீசார், புழல் சிறையில் ஜெகனை அடைத்தனர். இதை தொடர்ந்து, ஜெகனை கொலை நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று அழைத்து சென்றனர்.

அப்போது, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்று ஓடியபோது, கால் தவறி கிழே விழுந்தார். இதில், வலது கை உடைந்தது. பின், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us