Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பத்மநாப சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை

பத்மநாப சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை

பத்மநாப சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை

பத்மநாப சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் விமரிசை

ADDED : பிப் 24, 2024 12:12 AM


Google News
Latest Tamil News
அடையாறு, சென்னை, அடையாறில் அமைந்துள்ளது அனந்த பத்மநாப சுவாமி கோவில். இங்கு, ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் கடந்த, 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 19ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 21ல் தேரோட்டம் நடந்தது.

நேற்று மாலை, திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு, திருக்கல்யாண வைதீக காரியங்கள் துவங்கின.

துவக்கத்தில் புண்ணியாகவாசனம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வளர்க்கப்பட்டு, அக்னி பிரதிஷ்டை நடந்தது. பின், மங்கள ஆரத்தியுடன் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.

விழாவின் இறுதி நாளான இன்று காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

நாளை காலை 9:00 மணிக்கு உற்சவருக்கு, 108 சங்காபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us