/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மளிகை கடையில் தின்பண்டங்கள் திருட்டு மளிகை கடையில் தின்பண்டங்கள் திருட்டு
மளிகை கடையில் தின்பண்டங்கள் திருட்டு
மளிகை கடையில் தின்பண்டங்கள் திருட்டு
மளிகை கடையில் தின்பண்டங்கள் திருட்டு
ADDED : மே 31, 2025 03:05 AM
திருவொற்றியூர்:திருவொற்றியூர், கார்கில் நகரைச் சேர்ந்தவர் அருள்ராஜ், 68. மளிகை கடைக்காரர். இவர், நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த 5,000 ரூபாய், சோப்பு, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் மற்றும் ஐந்து கேக் துண்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்களும் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து, சாத்தாங்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், அதிகாலை, கார்கில் நகரில் சுற்றித்திரிந்த மர்ம நபர்கள், முதலில் பேக்கரி கடையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளனர். பூட்டு உடையாததால் அருகேயுள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து, கைவரிசை காட்டியுள்ளனர். பூட்டை உடைக்க சிறிய கடப்பாரை பயன்படுத்திருக்கலாம் என, தெரிகிறது.
சில தினங்களுக்கு முன், எண்ணுார் காவல் எல்லைக்குட்பட்ட, விம்கோ நகர், சக்திபுரம் பிரதான சாலையில் உள்ள, மளிகை கடை பூட்டை சிறிய கடப்பாரையால் உடைக்க முயன்ற இரண்டு வாலிபர்கள், பூட்டு உடையாததால், அருகே மக்கள் மருந்தகத்தின் பூட்டை உடைத்து, பணம் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு சம்பவங்களும் ஒரே பாணியில் அமைந்திருப்பதால், கடப்பாரை திருடர்களின் அட்டகாசம் அதிகரித்திருப்பதாக, வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.