ADDED : ஜன 31, 2024 12:22 AM
சேலையூர், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், ஸ்ரீபிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.
நேற்று காலை வந்து பார்த்தபோது, கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.