ADDED : மே 31, 2025 03:11 AM
கொடுங்கையூர்:கொடுங்கையூர் குப்பை கிடங்கு வளாகத்தில், இளநிலை பொறியாளராக பணிபுரிபவர் கோபி, 45.
இவர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில், நேற்று அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் இயங்கி வரும் ஜிக்மா பயோ மைனிங் நிறுவனத்தின் மூன்று பிளான்டுகள் மூலம், குப்பை தரம் பிரிக்கும் பணி நடக்கிறது.
இந்த பயோ மைனிங் நிறுவனத்தில், குப்பையில் இருந்து இரும்பு, செம்பு, ஸ்டீல் மற்றும் பித்தளை உள்ளிட்ட உலோகங்கள், தரம் பிரித்து எடுத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்த மர்ம நபர்கள் நான்கு பேர், இரும்பு, செம்பு, ஸ்டீல் மற்றும் பித்தளை உள்ளிட்ட உலோகங்களை திருடி சென்றனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.