/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கல்லுாரி வகுப்பு திறந்த முதல் நாளிலே பஸ்சில் மாணவர்களின் அட்டகாசம் ஆரம்பம் கல்லுாரி வகுப்பு திறந்த முதல் நாளிலே பஸ்சில் மாணவர்களின் அட்டகாசம் ஆரம்பம்
கல்லுாரி வகுப்பு திறந்த முதல் நாளிலே பஸ்சில் மாணவர்களின் அட்டகாசம் ஆரம்பம்
கல்லுாரி வகுப்பு திறந்த முதல் நாளிலே பஸ்சில் மாணவர்களின் அட்டகாசம் ஆரம்பம்
கல்லுாரி வகுப்பு திறந்த முதல் நாளிலே பஸ்சில் மாணவர்களின் அட்டகாசம் ஆரம்பம்
ADDED : ஜூன் 17, 2025 12:50 AM
வியாசர்பாடி, கல்லுாரி வகுப்பு திறக்கப்பட்டவுடன், மாணவர்கள் பேருந்துகளில் 'பஸ்டே' என்ற பெயரில் கூரையின் மீது ஏறி, ஊர்வலமாக சென்று கொண்டாடுகின்றனர். இது போன்று ஆபத்தான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதுடன், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் அடிக்கடி ஏற்பட்டன.
இதையடுத்து, சென்னையில் பஸ்டே கொண்டாட்டத்திற்கு போலீசார் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அட்டகாசத்தில் ஈடுபடுவோரை கண்காணிக்க ஆங்காங்கே போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று கல்லுாரிகள் திறக்கப்பட்டன. செங்குன்றத்தில் இருந்து காரனோடை நோக்கி சென்ற, தடம் எண் 57எச் பேருந்து, வியாசர்பாடி மேம்பாலம் வழியாக செல்லும்போது, அதில் இருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்தின் கூரை மீது ஏறி, கூச்சலிட்டு ரகளை செய்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். ஆனால், மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த அட்டகாசத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட நேரத்துக்கு பின்னர் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும், மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர், இதில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததது. மாணவர்கள் குறித்த விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.