நடைபாதை தடுப்பு சரிந்து விழுந்தது
நடைபாதை தடுப்பு சரிந்து விழுந்தது
நடைபாதை தடுப்பு சரிந்து விழுந்தது
ADDED : ஜூன் 15, 2025 12:19 AM

சென்னை, சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையை, நெடுஞ்சாலைத் துறையினர் பராமரித்து வருகின்றனர்.
தீவுத்திடல் - கிண்டி வரையிலான அண்ணா சாலையில், நடைபாதையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம் எதிரில் நடைபாதையில் அமைக்கப்பட்ட தடுப்பு கம்பிகள், சில மணி நேரத்திலேயே சாலையில் சரிந்து விழுந்தது.
முறையாக அடித்தளம் அமைக்காதது மட்டுமல்லாமல், குறைந்தளவு சிமென்ட் கலவை கொண்டு பூசியது தான், தடுப்பு கம்பிகள் விழுந்ததற்கு காரணம் என, அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டினர்.