/உள்ளூர் செய்திகள்/சென்னை/'பெப்பர் ஸ்பிரே' அடித்த ரவுடிகள் கைது'பெப்பர் ஸ்பிரே' அடித்த ரவுடிகள் கைது
'பெப்பர் ஸ்பிரே' அடித்த ரவுடிகள் கைது
'பெப்பர் ஸ்பிரே' அடித்த ரவுடிகள் கைது
'பெப்பர் ஸ்பிரே' அடித்த ரவுடிகள் கைது
ADDED : ஜன 29, 2024 01:40 AM
ஜாம்பஜார்:துரித உணவகத்தில்,'பெப்பர் ஸ்பிரே' அடித்த விவகாரத்தில், பிரபல ரவுடி சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அழகு ராஜா, 26. இவரது சகோதரர் பாலாஜி, 27. இவர்கள் இருவர் மீதும் கொலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மயிலாப்பூர் தாதா சிவகுமாரை கொன்ற வழக்கில், இவர்கள் இருவரும் முக்கிய குற்றவாளி. கடந்த வாரம் இவர்கள், ஜாம்பஜார் பகுதியில் துரித உணவகம் ஒன்றில் தகராறு செய்து, 'பெப்பர் ஸ்பிரே' அடித்து விட்டு தலைமறைவாகினர்.
மேலும், போலீசார் தங்களை 'என்கவுன்டர்' செய்யப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து, திருப்பூரில் பதுங்கியிருந்த அழகு ராஜா, பாலாஜி ஆகியோரை, ஜாம்பஜார் போலீசார் நேற்று கைது செய்தனர்.