Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண்ணின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டவர் கைது

பெண்ணின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டவர் கைது

பெண்ணின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டவர் கைது

பெண்ணின் ஆபாச படங்களை இணையத்தில் பதிவிட்டவர் கைது

ADDED : ஜன 25, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
சென்னை, தனது வாட்ஸாப், முகநுால் உள்ளிட்ட சமூகவலைதளப் பக்கங்களை யாரோ மர்மநபர் ஹேக் செய்து, ஆபாச புகைப்படங்களை பதிவிட்டுள்ளதாக, தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம் பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

ஆபாச படங்களை தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து அவமானப்படுத்தி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து, ஆபாச படங்களை அழிக்குமாறும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

விசாரணையில், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த தமீம் அன்சாரி, 22 என்பவர், ஆபாச படங்களை பதிவிட்டது தெரியவந்தது. சைபர் கிரைம் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

பெண்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us