/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மக்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தணும் மக்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தணும்
மக்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தணும்
மக்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தணும்
மக்கள் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்தணும்
ADDED : ஜூன் 14, 2025 02:45 AM
போக்குவரத்து நிறைந்த ராமாபுரம் சாலையில் விபத்து நிகழ்ந்திருப்பது மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது, மனித முயற்சியால் தடுத்திருக்க வேண்டிய விபத்து. எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி அளித்தாலும், நிர்வாக பொறுப்பை அளிப்பது மாநில அரசுதான். ஒப்பந்தம் முடிவு செய்வது, பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது, கண்காணிப்பது மாநில அரசின் கடமை.
இங்கு நிலை குலைந்திருப்பது பாலம் மட்டுமல்ல, மாநில அரசு நிர்வாகமும்தான். தமிழகத்தில் நடந்து வரும் அனைத்து கட்டுமான பணிகளின் பாதுகாப்புக்கு குறித்து, அரசு ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பின்மீது அக்கறை செலுத்த வேண்டும். உள்ளூர் பிரச்னைகள் எதையும் முதல்வர் கவனிப்பதில்லை. மத்திய அரசுடன் மோதலில்தான் கவனம் செலுத்துகிறார்.
- தமிழிசை,
தமிழக பா.ஜ., மூத்த தலைவர்